விஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை..!!

Read Time:4 Minute, 54 Second

imagesகிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நான்கு இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, குறித்த இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக இந்த வழக்கில் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

வழக்கு விசாரணையின்போது, நான்காவது நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார். குற்றம்சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் அவர் தெரிவித்தார்.

தீர்ப்பின் விபரம்:

இரண்டு பிள்ளைகளின் தாயராகிய பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக நால்வருக்கும், தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தாயராகிய பெண்ணை அதே பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக நால்வருக்கும் இந்தத் தீர்ப்பில் ஐந்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்ட ஈடாக ஐந்து இலட்சம் ரூபாவும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்ச ரூபாவும் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொருவரும் மூன்று வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் தண்டப்பணமும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 20 வருடமும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 5 வருடமும், நட்ட ஈடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப்பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமுமாக மொத்தமாக 30 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது..!!
Next post உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசிற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டும்..!!