கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை: இது “விடுமுறை காலம்” என கூறிய கைதி..!!

Read Time:1 Minute, 48 Second

britan_aquest_002சிறைக்கைதி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஹல் நகர சிறையில் தாமஸ் ஹோம்ஸ்(43) என்பவர் கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அதாவது மிக நீண்ட விடுமுறையை ஹல் சிறையில் கழிக்கிறேன், எனவே சில காங்களுக்கு உங்களோடு தொடர்பில் இருக்க இயலாது, அதனால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது இவருடைய பதிவு, காவல் துறை மற்றும் சமூதளபயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், சிறையில் கைப்பேசிகள் பயன்படுத்த அனுமதியில்லாதபோது, இவர் எவ்வாறு இதனை பதிவேற்றம் செய்திருக்க முடியும், அது மட்டுமன்றி அதுவும் தவறுக்காக தண்டனை அனுபவித்துக்கொண்டிருப்பவர், இவ்வாறு துளியும் பயம் இல்லாமல் ஒரு பதிவை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார், இவரின் தண்டனைக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியைப் போலவே நீல வானத்துடன் உள்ள மற்றொரு கிரகத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது..!!
Next post எம்.எல்.ஏ ஆகிறார் பிரபல நாயகி..!!