விழுந்தால் அழியும் ஆபத்து: பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்…!!

Read Time:2 Minute, 1 Second

aeccb8f3-6198-44a7-bfcd-859f724e8596_S_secvpfவிண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தற்போது பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது. அதன் பெயர் விண்கல் 86666 (2000 எப்.எல்.10) என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த விண்கல் சுமார் 2.6 கி.மீட்டர் அகலம் கொண்டது. அதை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ‘நாசா’ மையம் கண்டுபிடித்தது. அது ‘அப்பல்லோ 1862’ என்ற ராட்சத விண்கல் போன்று இருந்தது. அக்கல் பூமியின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

அதே போன்று இந்த விண்கல்லும் பூமியில் மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஓசோன் மண்டலம் முற்றிலும் அழியும். அதன் மூலம் பருவ நிலையில் மாறுதல்கள் உருவாகும். குறைந்தது 91 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும். அதனால் உலகமே அழியும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் மணிக்கு 63,374 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல் விரைவில் பூமியை தாக்காமல் கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை காதலிக்கவில்லையா? இந்த விளம்பர படத்தை பாருங்கள்..!!
Next post அமெரிக்காவில் தாயை சுட்டுக்கொன்று இதயத்தை எடுத்த மகன்…!!