ஒரே புகைப்படத்தால் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய ஜோடி…!!
தனது காதலனே கணவனாகப் போகும் மகிழ்ச்சியைக் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த மிரண்டா லெவி என்ற பெண் பேஸ்புக்கில், நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருப்பதுபோல போட்டோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அமெரிக்காவில் பொதுவாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அவளுக்காக வைர மோதிரத்துடன்தான் சம்மதம் கேட்பது வழக்கம். ஆனால், மிராண்டாவுக்கு வைரம் பதித்த மோதிரத்தை அவரது வருங்காலக் கணவனான கெல்லி வாங்கித் தரவில்லை.
எனினும், தமது காதலில் பொருட்கள் முக்கிமயல்ல என்கிற கட்டத்தை எட்டியதாகவும், இதனால் மோதிரம் தொடர்பாக தான் வருத்தமடையவில்லை! எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டவுடன் பலபேரால் பலமுறை பகிர்ந்துகொள்ளப்பட்டது, ஏன்? எனத் தெரியுமா!
கெல்லியும், மிராண்டாவும் இருக்கும் இந்த புகைப்படத்தில் கூடவே, கர்ப்பத்தைப் பரிசோதனை செய்யப் பயன்படும் குச்சியும் இருந்தது! ஆகவே, கர்ப்பம் தரித்ததால் திருமணம் முடிக்க உள்ளனரா? அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களை கேலி செய்ய இந்தப் புகைப்படமா? என எல்லோருக்கும் எழுந்த குழப்பம்தான், புகைப்படம் பகிரப்பட காரணமாக அமைந்துள்ளது.
Average Rating