By 11 October 2015 0 Comments

ஈரா­னி­லி­ருந்து சட­ல­மாக அனுப்­பி­வைக்­கப்­பட்ட கல­கி­ரிய தோட்ட இளம் பணிப்பெண்..!!

death_19வீட்­டு­வே­லைக்கு பிள்­ளை­களை அனுப்­பு­வ­தாலும், அதே­போன்று வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்பெண்­களை அனுப்­பு­வ­தாலும் ஏற்­படும் பிரச்­சி­னைகள், கொடு­மைகள், உயி­ரி­ழப்­புக்­கள்­பற்றி பத்­தி­ரி­கை­களில் அடிக்­கடி செய்­திகள் வெளி­வ­ரு­கின்­றன. இவை மக்­க­ளிடம் தெளிவை ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. ஆனாலும், மக்கள் தெளி­வ­டை­வ­தாக இல்லை. தொடர்ந்தும் இது­போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.

மலை­ய­கத்தில் இது­தொ­டர்­பான விழிப்­பு­ணர்வு இன்னும் ஏற்­ப­ட­வில்லை என்­ப­த­னையே இது குறிப்­ப­தாக உள்­ளது. அண்­மையில் கண்டி மாவட்­டத்தில் இது­போன்­ற­தொரு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இது­பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கண்டி, பன்­விலை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட மடுல்­கலை, கல­கி­ரிய தோட்­டத்­தைச் சேர்ந்த ராம­கிருஸ்ணன் செல்வி என்ற (வயது 20) பெண் அண்­மையில் சட­ல­மாக ஈரான் நாட்­டி­லி­ருந்து அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­ப­வம் ­பற்றி உயி­ரி­ழந்த பெண்ணின் தாயா­ரான மாயழகு தீபாம்பாள் கூறு­கையில், எனது கணவன் ஆறு வரு­டங்­க­ளுக்கு முன் காலமாகி­விட்­டார். இந்தநிலையில் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன் வறுமை கார­ண­மாக எனது மகளை (மூன்­றா­வது மகள்) கொழும்பு தெஹி­வளை பிர­தே­சத்தில் வசித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழி­ல­திபர் ஒரு­வரின் வீட்­டுக்கு வீட்டு பணிப்­பெண்­ணாக வேலைக்கு அனுப்­பி­னேன். கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் குறித்த ஈரான் நாட்டு தொழி­ல­திபர் மூன்று மாத சுற்­றுலா வீசாவில் தனது நாட்­டுக்கு எனது மக­ளையும் அழைத்துச் செல்­வ­தாக தொலை­பேசி மூலம் கூறினார்.

எனது மகளின் எதிர்­கா­லத்தை கருதி நான் அதற்கு உடன்­பட்டேன். அதன் பிறகு மாதா மாதம் இலங்­கையில் உள்ள உற­வி­னர்கள் ஊடாக மகளின் சம்­பளப் பணம் எனக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அத்­தோடு அடிக்­கடி தொலை­பேசி வாயி­லாக எனது மகள் என்­னோடு தொடர்­பு­களை பேணி­வந்தாள்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன் எனது மகள் கடு­மை­யாக சுக­யீ­ன­ம­டைந்­துள்­ள­தாக எனக்கு அறிவித்­தனர். ஆனால், அப்­போது தொடக்கம் எனது மக­ளி­ட­மி­ருந்து தொடர்­புகள் குறை­வா­கவே இருந்து வந்­தன. இந்­த­நி­லையில், கடந்த வாரம் எனது மகள் இறந்து விட்­ட­தாக வீட்­டுக்­கா­ரர்கள் எனக்குத் தகவல் வழங்­கி­ய­துடன், அதனை மிகவும்; வேத­னை­யுடன் பகிர்ந்து கொண்­டனர். மகளின் சட­லத்­தையும் அனுப்­பி­வைத்­துள்­ளனர் என்றார்.

விமானம் மூலம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருந்த சட­லத்தைப் பெற்­றுக்­கொண்ட உற­வி­னர்கள் கடந்த சனிக்­கி­ழமை தோட்ட மயா­னத்தில் அடக்கம் செய்­தனர்.

இம் மரணம் தொடர்பில் உயி­ரி­ழந்த பெண்ணின் குடும்­பத்­தினர் பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ள­துடன், இது­தொ­டர்­பாக கொழும்­பி­லுள்ள மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம், வெளி­நாட்டு வேலை வாய்ப்புப் பணி­யகம் மற்றும் குற்­றத்­த­டுப்பு பிரிவு ஆகி­ய­வற்றில் எழுத்து மூல­மான முறைப்­பா­டு­க­ளையும் செய்­துள்­ளனர்.

உயி­ரி­ழந்த பெண் 17 வயதில் வெளி­நாட்­டுக்கு (ஈரான்) அழைத்துச் செல்­லப்­பட்­டுள்ளார். இவரை ஈரா­னுக்கு அழைத்துச் செல்­வ­தற்கு பெற்­றோ­ரி­டத்தில் (தாய்) ஒப்­புதல் பெற்­றி­ருக்­க­வில்­லை­யென்று கூறப்­ப­டு­கி­றது. பெண்ணின் பெயரில் பெறப்­பட்ட கட­வுச்­சீட்டில் பிறந்த திகதி 7.10.1993 என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அடை­யாள அட்டை இல்­லாத மேற்­படி பெண்­ணுக்கு போலி­யான அடை­யாள அட்டை (இலக்கம் 937817266V) பெறப்­பட்டு, அந்த இலக்கம் கட­வுச்­சீட்­டிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவரின் பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­தி­ரத்தில் பிறந்த திகதி 07.10.1995 என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே போலி­யான ஆவ­ணங்கள் தயார் செய்­யப்­பட்டு ஈரா­னுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்ளார் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே, உயிரிழந்த பெண் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று குடும்பத்தினர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இன்று அழுது புரண்டு துக்கத்தை வெளிப் படுத்துவதன் மூலம் அப்பாவிப் பெண்ணின் உயிரை மீட்டெடுக்க முடியுமா? ஓவ்வொரு பெற்றோரும் இதை உணரவேண்டும். அப் போது தான் இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்கலாம்.Post a Comment

Protected by WP Anti Spam