By 12 October 2015 0 Comments

அமுக்க அடுப்பு வெடித்­ததால் காலை இழந்த 2 வயது பாலகி..!!

timthumbவீட்­டி­லி­ருந்த அமுக்க அடுப்பு (பிரஷர் குக்கர்) வெடித்­ததால் 2 வயது பால­கி­யொ­ருவர் தனது காலொன்றை இழந்த விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சமந்தா கொன்­ஸாலெஸ் என்ற மேற்­படி பால­கியின் பாட்டி சம்­பவ தினம் சமை­ய­ல­றையில் அமுக்க அடுப்பில் சமைத்துக் கொண்­டி­ருந்­துள்ளார். அச்­ச­மயம் அங்கு வந்த பாலகி அழுக்­காக இருப்­பதை அவ­தா­னித்த பாட்டி, சமையல் நீர் தொட்­டியில் பால­கியின் உடலைக் கழுவி சுத்­தி­க­ரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார்.

இதன்­போது திடீ­ரென அமுக்க அடுப்பு வெடித்துச் சித­றி­யுள்­ளது. இதனால் சமந்­தா­வுக்கு உடல் முழு­வதும் கடும் எரி­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து பாலகி மருத்­து­வ­ம­னைக்கு உட­ன­டி­யாக கொண்டு செல்­லப்­பட்டார். அங்கு அந்தப் பால­கியின் மோச­மாக எரிந்து கரு­கிய இடது கால் வெட்டி துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம் ஏனைய காலி­லுள்ள விரல்­களும் வெட்டி அகற்­றப்­பட்­டன. இந்த சம்­ப­வத்தில் சமந்­தாவின் பாட்டிக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.



Post a Comment

Protected by WP Anti Spam