இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தார்: சிக்கலில் அரசு மருத்துவர்…!!

Read Time:2 Minute, 21 Second

3b20f602-58ac-4dd7-8fb5-91d4ecb4ee2b_S_secvpfரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது.

ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில் நடைபெற்றுள்ள சம்பவம் அரசு மருத்துவமனைகள் செயல்படும் லட்சணத்திற்கு மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. நேற்று மதியம் மும்பையின் பேருந்து நிறுத்ததில் மயங்கிகிடந்த 45 வயது ஆண் ஒருவர் போலீஸ் உதவியுடன், அருகில் இருந்த சீயோன் மருத்துவமனை என்று அழைக்கப்படும் நகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது பணியில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி ரோஹன் அந்த மனிதரின் நாடியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். மேலும் அவர் மருத்துவமனை ஆவணங்களிலும் அவர் இறந்துவிட்டதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அந்த மனிதரை மருத்துவமனையின் பிணவறைக்கு ஊழியர்கள் எடுத்துச்சென்றனர். அப்போது ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தவர் மூச்சுவிடுவதை ஊழியர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவரை அழைத்துள்ளனர்.

தான் இறந்துவிட்டதாக கூறியவர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர், அந்த நபரை உடனடியாக மற்றொரு பிரிவுக்கு மாற்றிவிட்டு அவர் இறந்துவிட்டதாக எழுதப்பட்டிருந்த ஆவணங்களை கிழித்து எரிந்து தடயங்களை மறைத்துள்ளார்.

ஆனால் தற்போது இந்த விஷயம் முழுவதும் வெளியானதால் தலைமை மருத்துவ அதிகாரி ரோஹகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி…!!
Next post புள்ளிமான் என நினைத்து வாலிபரை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்: பிரான்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!