பிரித்தானிய விசாவை எவ்வாறு பெறுவது? – படிமுறையாக விளக்கும் காணொளி வெளியீடு (வீடியோ இணைப்பு)..!!
பிரித்தானியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்பவர்களுக்கு விசா செயற்கிரமங்கள் நேரடியான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த பிரித்தானிய விசா மற்றும் குடிவரவுத் திணைக்களமானது விசா செயற்கிரமத்தின் ஒவ்வொரு படிமுறையையும் விளக்குவதற்கான புதிய காணொளி காட்சியை வெளியிட்டுள்ளது.
இந்த காணொளி காட்சியில் இணையத்தளத்தில் வெளியிடும் விசா விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது, என்பது முதல் விசாவைப் பெறுவதற்கு எவ்வாறு விசா விண்ணப்ப நிலையத்தில் கைவிரல் அடையாளங்களை வைப்பது வரையான அனைத்து விபரங்களும் படிமுறையாக விளக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு உன்னத சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த வருடத்திலான எமது பிந்திய விசா புள்ளிவிபரங்களின் பிரகாரம், பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்களுக்கான விசாக்களின் தொகை 8 சதவீதத்துக்கும் அதிகமான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
நாம் இலங்கைப் பிரஜைகளுக்கு 21,000 க்கு மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் பிரித்தானிய விசாவுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பிப்பதை நேரடியானதாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
புதிய காணொளி காட்சியின் இலக்கு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிப்பதை இலங்கையர்களுக்கு இலகுவாக்குவதாகும். பிரித்தானியாவுக்கு வருகை தரும் இலங்கையர்களுக்கு அங்கு இதமான வரவேற்பளிக்கப்படும்.
நாம் அடுத்த வருடத்தில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்பவர்களின் தொகையில் அதிகரிப்பொன்றை எதிர்பார்க்கிறோம் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்தார்.
பிரித்தானிய விசா வழங்கும் நடைமுறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சேவை
அபிவிருத்திகளில் வாடிக்கையாளர்கள் தமது விசா விண்ணப்பங்கள் செயற்கிரமத்தில் இருக்கும் போது தமது கடவுச்சீட்டுகளை வைத்திருக்க அனுமதிப்பது உள்ளடங்குகிறது.
Average Rating