ஜப்பானில் கரை ஒதுங்கிய வித்தியாசமான உருவம்: பீதியில் பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 58 Second

mystery_footage_002ஜப்பான் நாட்டில் வித்தியாசமான பாறை போன்ற உருவம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு தாக்கிய சுனாமியால் 18 ஆயிரம் மக்கள் பேரலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆழிப்பேரலை என மக்களால் அழைக்கப்பட்ட அந்த சுனாமி தாக்கிய சில மாதங்களில் ஜப்பான் கடற்கரையில் வித்தியாசமான ஒரு உருவம் கரை ஒதுங்கியுள்ளது.

திமிங்கலம் போன்ற உருவ அமைப்பு கொண்ட அந்த உருவம் பார்ப்பதற்கு பெரும் பாறை போன்று காட்சியளிக்கின்றது.

சுனாமியில் இருந்து உயிர் தப்பிய ஒரு ஜப்பானியர் இந்த உருவத்தை படம் பிடித்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த உருவத்திற்கு தலை பகுதி மற்றும் வால் பகுதி போன்றவை இல்லாததால் மீன் போன்ற உருவம் அல்ல என கூறப்படுகிறது. ஒருபகுதி சிதைந்து காணப்படுவதால் அது எந்த வகையான உருவம் என இதுவரையில் எவருக்கும் தெரியவில்லை.

இதுபோன்ற சில வித்தியாசமான உருவங்கள் சுனாமி தாக்கியதன் பின்னர் அமெரிக்க கடற்கரையிலும் ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

உடைந்து நொறுங்கிய வீடுகள், படகுகள், அலுவலக கட்டிடங்கள் என 50 லட்சம் டன் அளவுக்கு இடிபாடுகள் கடலில் கலந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் 70% கடலுக்குள் மூழ்கியதாகவும் 1.5 மில்லியன் டன் பொருட்கள் இன்னமும் கடலில் மிதப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு Texas மாகாணத்தின் அளவில் இடிபாடு குவியல் ஒன்று California பகுதியில் மிதந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் 25 அடி நீளம் கொண்ட Fiberglass boat ஒன்றின் பகுதி Oregon கடற்கரை பகுதியில் மிதந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில் கரை ஒதுங்கிய உருவம் குறித்து இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்த நாட்டு கடலில் தீவிர ஆராய்ச்சி நடத்த வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்…!!
Next post நிலச்சரிவு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி…!!