இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம்: 27ந் தேதி விவாதம்
Read Time:55 Second
இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் மக்களவையில் வரும் 27ந் தேதி நடைபெறுகிறது. மாநிலங்களவையில் இந்த பிரச்சனை குறித்த விவாதம் 28ந் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அவர் பங்கேற்காமல் விவாதம் நடத்த இயலாது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பிரதமர் 25ந் தேதி தாயகம் திரும்புகிறார். இதனால் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதம் 27ந் தேதி நடைபெறுகிறது.