சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் இன்றாகும்..!!

Read Time:1 Minute, 42 Second

white cane dayஉலகலாவிய ரீதியில் இன்று வெள்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் ஒளிகாட்டும் விளக்காக வெள்ளைப்பிரம்பு காணப்படுகிறது.அதன் பெறுமதியை உணர்த்தும் வகையிலும் விழிப்புலனற்றவர்களின் செயற்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு உலகளாவிய ரீதியில் கடந்த 1964ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அரிமாக் கழக மாநாட்டில், வெள்ளைப்பிரம்பு விழிப்புலனற்றவர்களின் அடையாளச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே வெள்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டள்ளன. அதன் ஒரு பகுதியாக, வெள்ளைப்பிரம்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பஸ் நிலையத்தில், இன்று மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சியொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளவத்தையில் தீ…!!
Next post ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை…!!