கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை…!!

Read Time:1 Minute, 32 Second

2a64a0ae-d633-4f12-8cde-874b8932019f_S_secvpfஅமெரிக்காவில் அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான போட்டியில் கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சார்பில், என்ஜினீயரிங் பேராசிரியர் மிஹ்ரி ஒஸ்கானின் சிந்தனையை எரே கார்பாஜோ நிறுவனம் உடலில் அணியக்கூடிய நீச்சல் உடையாக வடிவமைத்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத துணி வகையில் குறைந்த செலவில் இது தயாராகியுள்ளது. இது ‘ஸ்பான்ஜ்’ போன்ற தன்மையுள்ள துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் 3டி பிரிண்ட்கள் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அலை போன்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீச்சல் உடை கடலில் பரவியுள்ள எண்ணெய் மற்றும் கெமிக்கல் கழிவுகளை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனது எடையைப் போல 25 மடங்கு கழிவுகளை உறிஞ்சும் தன்மையுடன் உள்ளது.

இந்த தொழில்நுட்பம் தொடர்பான வீடியோ..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொம்மைக் காரை இந்த வயதிலும் ஓட்ட விருப்பமா?: வீடியோ இணைப்பு…!!
Next post தன் தூக்கத்தைக் கெடுத்த சிறுமியை பழிவாங்கும் நாய்: வீடியோ இணைப்பு…!!