Archive for the கட்டுரைகள் Category

உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)

உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)

நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை  இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதை பார்க்கின்ற போது மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் அச்சம் அடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. ஆனால் இலங்கை  அரசாங்கம் அச்சம் அடைகின்ற- சிங்கள தேசம் வேரோடு அழிக்க நினைக்கின்ற நாடு கடந்த தமிழீழ அரசை வேரிலேயே அழிப்பதற்கு உள்ளிருந்தே சிலர் திட்டமிட்டு வருவதாகவும் நாடு கடந்த அரசுக்கான தேர்தல் முடிந்த கையோடு செய்திகள் [...]

No Comments

சுவிஸ்வாழ் தமிழ்மக்களே மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்!! ‘மீண்டும் புறப்பட்டு விட்டான் “(புங்குடுதீவு) சுவிஸ் சுரேஸ்”..!!!

முள்ளிவாய்கால் பிரதேசத்தில் ரணகளத்தில் சிக்குப்பட்டு இரத்தமும் சதையுமாய் குற்றுயிராய் கிடந்தவர்களையும், பிணங்களாய் கிடப்பவர்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து, மரண ஓலமிடும் மனிதர்களை கூட நின்றுகூட பார்க்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் தமது உயிர்;களை கையில் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் உயிர்போகின்ற நிலைமையிலிருந்து மீண்டு, எங்கோ ஓர் திக்குதிசை தெரியாமல் ஓடி, யாரோ நமது உயிர்களை காப்பாற்ற போகிறார்கள் என்றெண்னி ஒடிவந்த மக்கள் இன்று.. வெறும் உயிருடன் மனம் வெதும்பி துன்பம் மிகவுழன்று, துயர் நிறைந்த வாழ்கையில் மீண்டும் [...]

7 Comments

ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை நவீன பிரபாகரன் என்று கூறிய இந்த ஈரோஸ் தலைவர்(?) பிரபாகரன் யார்..?? (கட்டுரை)

மீண்டும் ஒரு நவயுக பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இவரது தலைமையிலான ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் செய்யும் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் கட்டுக்கடங்காதவை. அதேபோன்று புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்யும் கடத்தல்கள், கொலைகளும் கட்டுக்கடங்காதவை. இந்த அமைப்புக்கள் இரண்டுமே அராஜக ஆயுதக்குழுக்களாகும். புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இயங்குபவர்களே. ஆனால் நாம் தனித்தே இயங்குபவர்கள். நாம் வெளிநாட்டில் செய்துள்ள சில முதலீடுகளால் பெறும் நிதிகள் மற்றும் சுயதொழில் மூலமும் [...]

4 Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-7)

இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம்… இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் – முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம். முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது. இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற [...]

1 Comment

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-6)

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-6)

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை. புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி [...]

No Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-5)

கை கொடுத்த இந்திய கடற்படை… இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை. இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது. 2006ம் ஆண்டு முதல் போர் [...]

No Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-4)

தேர்தலுக்கு முன்பு ‘முடிக்க’ விரும்பிய இந்தியா… பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர். கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது. பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட [...]

4 Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-3)

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்… இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார். இதை ராஜபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிஸ்தான், [...]

3 Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-2)

முதலில் போன ஹெலிகாப்டர்கள்… 2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன [...]

No Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-1)

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-1)

இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War [...]

2 Comments

சாகசங்களின் சொந்தக்காரர் “K.P” சர்வதேச புலனாய்வு சதி வலையில் சிக்கியது எப்படி.?

சாகசங்களின் சொந்தக்காரர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலளார் செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் தெளிவான செய்தி ஒன்றை உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் உறவு நிலை மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றது என்பது தான் அந்த கசப்பான செய்தி. கே.பி அல்லது செல்வரசா பத்மநாதன் என்பவர் தாய்லாந்து நாட்டு பிரஜை அவரை மலேசியா என்ற மற்றுமொரு நாட்டில் வைத்து கைது செய்வது அல்லது கடத்துவது என்பதும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது என்பதும் சர்வதேசத்தின் [...]

5 Comments

கருணா- பிள்ளையான்கள் கட்டமைக்கும் அதிகாரம்… -ப.வி.ஸ்ரீரங்கன்

கருணா- பிள்ளையான்கள் கட்டமைக்கும் அதிகாரம்... -ப.வி.ஸ்ரீரங்கன்

நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும், சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத் தன்மையையும் எதிர் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். பொய்மையையும், கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை, மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு “அரசியல்” செய்கின்றன. எம்மினத்துள் ஊடுருவியுள்ள பாசிசக் கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது. இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்தி வைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது. இதற்கு நல்ல உதாரணம் கோத்தபாய இராஜபக்ஷ. இந்த [...]

No Comments

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்!!

வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதற்காக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது தான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும். ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டில் எதேட்சையாக தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பு முத்துக்குமார் எனும் இளைஞர் 29.01.2009இல் தீக்குளித்து தற்கொலை செய்துண்டார். இந்த தற்கொலை சம்பவமானது உலக தமிழர்கள் [...]

23 Comments

புலிகளை நம்புங்கள்!!! ஒரு மாதத்தில் யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி!! -செ.பத்மலிங்கம்

புலிகளை நம்புங்கள்!!! ஒரு மாதத்தில் யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி!! -செ.பத்மலிங்கம்

பட்டப்பகலிலே இந்தக்கட்டுரையை நீங்கள் வாசிப்பவர்களாக இருந்தாலும்… என்னடா கனவு காண்கிறேனோ? இல்லையெண்டால் குடுகுடுப்பைக்காரன் ஏதாவது உளறுகின்றானோ? என்று சுற்று முற்றும் சுழன்று பார்ப்பபீர்கள்.ஏனென்றால் களமுனையிலே தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர் புலிகள். விடிய எழும்பிப்பார்த்தால் விடத்தல்தீவில் ராணுவம். வெளியே போய்விட்டு வந்து பார்த்தால் வெள்ளாங்குளத்திலே ராணுவம். நாய் குலைத்து எழும்பிப்பார்த்தால் நாச்சிக்குடாவில் ராணுவம். இதுதான் இன்றைய நிலை. ஆனால் புலிகள் என்ன சொல்லுகின்றார்கள் என்றால் பொய்ப்பிரசாரத்தின் சிகரமான கோயபெல்சே பிரமித்து தலைசுற்றி விழுமளவிற்கு [...]

3 Comments

போராட்டம் அல்ல… நடந்தது ஒரு நாடகம்!! -துக்ளக்

போராட்டம் அல்ல... நடந்தது ஒரு நாடகம்!! -துக்ளக்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் இதைத்தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் நடாத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் தே.மு.தி.க கலந்து கொண்டதும் அ.தி.மு.க கலந்து கொள்ளாததும்தான் முக்கிய செய்திகளாயின. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இலங்கைத்தமிழர்களின் நிலமை இங்கு அரசியல்தானே தவிர வேறொன்றுமில்லை என்பது அனைவரும் அறிந்து விடயம். இப்போது உண்ணாவிரதம் நடத்திய வலது கம்யுனிஸ்டுகளும் அதில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளும் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை காணச்சகிக்காதவர்களா? இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படுவதுதான் கண்டனத்திற்குரியது [...]

7 Comments

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >