புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் உட்புகுந்தது

இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் உட்புகுந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் 58வது படையணி கரையாமுல்லிவாய்க்கால் வழியாகப் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்திருப்பதாக அவர் நேற்று...

புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவில் கைது

புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் சரமோசா மோல்;ட் பகுதியில் வைத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் மூன்றுபேரைக் பொலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரும்,...

முல்லைத்தீவு வெடிப்பு சம்பவத்தில் செஞ்சிலுவைக்குழு பணியாளரும், தாயும் பலி

முல்லைத்தீவு மோதல் வலயப் பிரதேசத்தில் இன்றையதினம் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவரும் அவரது தாயாரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்றுபகல் இடம்பெற்ற இந்த வெடிச் சம்பவத்திலேயே இருவரும்...

நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பயங்கரவாதிகள் சார்வார்தோட்டத்தில் படையினர்மீது தாக்குதல்

அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த சர்வார்தோட்டம் பகுதியை மீண்டும் புலிகள் மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சியை 59வது படைப்பிரிவினர் முறியடித்துள்ளனர். தற்கொலைக் குண்டுப் படகுகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னரங்கப் பகுதியை தகர்த்து...

லண்டனிலும், பிரான்ஸிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்

லண்டனிலும், பிரான்ஸிலும் பெரும்பாலும் இலங்கையர்கள் வழிபாடு செலுத்தும் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இங்கு லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் இருக்கின்ற சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால்...

அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது..

அதிர்வு (athirvu) மற்றும் தமிழ்வின் (tamilwin) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும்...

இலண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; பிரிட்டிஷ் பாராளுமன்றில் பெரும் வாதப் பிரதிவாதம்

இலண்டன் நகரில் தமிழர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக...

விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் மக்களின் பாதுகாப்புக்கே முக்கியமளிக்க வேண்டும்: த.தே.கூ.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் சக...

பாதுகாப்புச் சபையில் முதன்முறையாக இலங்கை விடயம் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முதன் முறையாக இலங்கை விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் அதிகரித்துள்ளமை பற்றி அங்கு குரல்கள் எழுப்பப் பட்டுள்ளன. “இலங்கையின் வடபகுதியில் மோசமடைந்திருக்கும் மனிதநேய நிலைமைகள்...

கொழும்பில் அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்கள், 85 கிலோ வெடிபொருட்கள் மீட்பு

அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர் குண்டுகள், 85 கிலோ வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் நேற்று கொழு ம்பு பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு பாலத்துறை, லூகாஸ் மாவத்தையிலுள்ள கராஜ் ஒன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த...

பாதுகாப்பு செயலரை இலக்கு வைத்த தாக்குதல் முயற்சி; பிரதான சந்தேக நபர் “கிளி” வவுனியாவில் கைது

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘கிளி’ என்றழைக்கப்படும் தர்மலிங்கம் தர்மராதன் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களோடு மக்களாக வவுனியா...

55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு மீட்பு

வெள்ளைமுள்ளிவாய்க்கல் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாண யக்கார தெரிவித்தார். இந்தப் படகில் 1500 கிலோ...

பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டது; இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போகொல்லாகம வேண்டுகோள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களு க்கும், உயர் ஸ்தானிகரால யங்களுக்கும் வழங்கப்படு கின்ற பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுக ளிடம் வேண்டுகோள் விடுத் திருப்பதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்...

புலிகளின் கடல்வழித் தாக்குதல் முயற்சி படையினரால் முறியடிப்பு; 3 தற்கொலைப் படகுகள் தாக்கியழிப்பு; 5 மணி நேரம் சமர்

முல்லைத்தீவு, வட்டுவாக்கலிலிருந்து சர்வார் தோட்டம் ஊடாக முன்னேறிச் செல்லும் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் கடல் வழி தாக்குதல்களை இராணுவத்தினர் வெற்றி கரமாக முறியடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார...

இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கவலை: தாமதிக்கவும் இனி நேரமில்லை

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். நேற்று (13) வெள்ளை...