படையினரின் முற்றுகை இறுகியது; நாடளாவிய ரீதியில் கொண்டாட்டங்கள்..

வன்னியில் இன்னமும் புலிகளின் பிடியிலிருக்கும் பகுதிகள் மீது படையினரின் பிடி மேலும் இறுக்கப்பட்டிருப்பதாக படைத்தரப்பு கூறியுள்ளது. 400 ஓ 600 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் இப்போது விடுதலைப் புலிகள் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது....

பிரபாகரனின் எந்தத் தடயமும் இல்லை; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. மோதல்களில் கொல்லப்பட்ட...

ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளிடம் சிக்கியிருந்த சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400க்கு 600 மீற்றர் சதுரத்துக்குள் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 72மணித்தியாலயங்களுக்குள் 50,000க்கம் அதிகமான சிவிலியன்களை...

யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)

யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டுசில்டோவ் பிரதான புகையிரதநிலையத்தில் கூடிய புலிகளின் இளையோர் அமைப்பினர் பெண்களையும் குழந்தைகளையும்...

வடுவாக்கல் பகுதியிலிருந்து 10,000 பொதுமக்கள் படையினரால் மீட்பு

வடுவாக்கல் கரையோரப்பகுதியிலிருந்து இதுவரை 10,000பொதுமக்களை இராணுவத்தின் 59ஆம் படையணி மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பெருமளவிலான பொதுமக்கள் இராணுவத்தினரிடம் வந்து தஞ்சமடைகின்றனர். இவ்வாறு தப்பி வருபவர்கள் மீது விடுதலை...

ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது -விடுதலைப் புலிகள்

ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அப்பாவி மக்களின் நலனுக்காக எங்களது துப்பாக்கிகளை மெளனமாக்குகிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் குறித்த...

பிரபாகரன் தற்கொலை-ராணுவம் கூறுகிறது: உடல் மீட்கப்பட்டதாக தகவல்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகவலை இதுவரை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக...

மயிலம்பாவெளியில் 4இளைஞர்கள் வெடிபொருட்களுடன் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியிலுள்ள மயிலம்பாவெளி பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனை சாவடியில் வெடிப் பொருட்களுடன் 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் நகுலேஸ்வரன் சத்தியராஜா விஜிரன் பேரிலாவெளியைச் சேர்ந்த ரங்கநாதன் ஆனந்தராஜா மற்றும்...

புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; வெளிநாட்டுத் தலையீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்திருந்த புலிகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில்..!!!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து 58ம், 59ம் படைப் பிரிவுகள் நேற்று...

முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள், மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து...

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்!!!

72மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும்,தற்போது விடுதலை புலிகளின்...

விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு

26வருட உள்நாட்டுப் போருக்கு பின்னர் விடுதலைப் புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர் விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப்பெற்ற ஒருநாட்டுக்கு...