விடுதலைப் புலிகளுக்கு உணவு மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்கிவந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது

மன்னார் மற்றும் வில்பத்து பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்து வந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிமல்...

சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்

சிங்கள ஊடகவியலாளரான பி.எகானிலிகொட என்பவர் இனந்தெரியாதோர்களால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்தசம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமயில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது குறித்த ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகமான...

புலிகளின் முக்கிய படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கைது

விடுதலைப்புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது விடுதலைப்புலிகள் அமைப்பின் கடந்த 19ஆண்டு காலமாக அங்கம் வகித்துவந்த சிரேஷ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்...

திஸ்ஸநாயகத்திற்கு 20வருட கடூழியச் சிறைதண்டனை

சண்டே டைம்ஸ் பத்தி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20வருட கடூழியச்சிறைதண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்...

சரிகாவை கமல் திருமணம் செய்தது ஏன்?

'ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்!’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். வட இந்திய தனியார் சேனலுக்கு கமல் ஹாசன், நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது,...

பார்முலா ஒன் வரலாற்றில் முத்திரை பதித்தது இந்தியா

பார்முலா ஒன் மோட்டார் பந்தய வரலாற்றில் இந்தியாவின் போர்ஸ் இந்தியா அணி முதன் முறையாக புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளது. போர்ஸ் இந்தியா டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம்பிடித்து 8 புள்ளிகள் பெற்றார்....

நிவாரணக்கிராமங்களுக்கு மீளவும் திரும்பிய அருட்சகோதரிகள்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து கடந்த வாரம் தமது சொந்த வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரு அருட்சகோதரிகள் நிவாரணக்கிராமங்களுக்கே மீளத்திரும்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா நிவாரண கிராமங்களில்; தங்கியிருந்த 107 இந்து மதக் குருமார்களின் குடும்பங்களைச் சேர்ந்த...

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறை!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வந்துள்ள...

வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் மரணத்தில் மர்மம்!

கொழும்பு, பொரளையிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மரணமாகியுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகின்றது. நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியாவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் திருமணம் செய்தவருமான சின்னையா தெய்வேந்திரன்...

திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்து!

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை அங்கு அழைத்துச்சென்று மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்தாகியுள்ளது. முதற்கட்டமாக 3,500 பேரை திருமலைக்கு அழைத்துச்சென்று மீளக் குடியமர்த்துவதற்கு மீள்குடியமர்வு அமைச்சு ஏற்பாடு செய்யப்...

புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வைத்து கைது

புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர்...

கொழும்பில் மீட்கப்பட்ட மலையக சிறுமிகளின் சடலங்கள் தொடர்பில் மர்மங்கள்

கொழும்பு பௌத்தலோகா மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட பதுளை முள்ளுக்காமம் பகுதியைச் சேர்ந்த யுவதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேதபரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் கடந்த 28ம் திகதி...