பிரபாகரனை பிடித்து பின்னர் கொல்லவில்லை- இலங்கை மறுப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அவரை படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை மறுத்துள்ளது. கடந்த மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை தெரிவித்தது. இந்த...

இராணுவஅதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை -இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

இராணுவ அதிகாரிகள் அரசியயில் ஈடுபவது முற்றாக தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இதுதொடர்பில் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமி;ட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள...

சர்வதேச கடனட்டை சூத்திரதாரி “கனடா உமேஸ்” சென்னையில் கைது

சர்வதேச ரீதியாக கடனட்டை மோசடியில் ஈடுபட்டுவந்த குழு ஒன்றின் பிரதான சூத்திரதாரி என தெரிவிக்கப்பட்டு இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் இருந்து பாரிய போலி கடனட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களும்...

கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு பாடசாலைகளில் தங்கவைப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மல்லாவி...

400கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை புலிகள் இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் -இந்திய ஊடகம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பு சுமார் 400கோடிரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் அசாம் விடுதலைப் போராளிகளுக்கே புலிகள் அதிகளவு ஆயுதங்களை விற்பனை...

படகு கைப்பற்றப்பட்டதையடுத்து பெரியகல்லாறில் பாரிய தேடுதல் நடவடிக்கை

மட்டக்களப்பு பெரியகல்லாறிலும் இன்றுகாலை 6மணிமுதல் முற்பகல் 11மணிவரை பாரிய தேடுதல் நடவடிக்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை நேற்று பொலீசார் மீட்டதையடுத்தே இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 50பேர் பயணிக்கக்...

யாழ்கோட்டையில் தேசியக்கொடி; ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுகிறார்

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தெற்கு இளைஞர்கள் 250பேருடன் யாழில் இப்போது தங்கியுள்ளார் அவர் இன்று யாழ்கோட்டையில் இலங்கை தேசியக்கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுகிறார் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. 1996ல் யாழ்கோட்டையை இலங்கை இராணும்...

76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..

இலங்கையிலிருந்து 76பேருடன் கனடா சென்றடைந்த ஓசியன் லேடி என்கிற கப்பல் புலிகளுடையதென தெரிவிக்கப்படுகின்றது. இக்கப்பல் புலிகளால் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் வன்னியில்...

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில் தமிழ்நாடு இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் உள்ளிட்ட தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்ப ஆர்வம் காட்டுவதாக தமிழக செய்திகள்...

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதில்லையென தமிழ் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவிப்பு

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத்தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான...

ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக தெரிவித்து கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5சந்தேகநபர் மீது தீவிர விசாரணை

கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் இருவர்...