இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் -இயக்குநர் சீமான்.

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்....

வன்னியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு இந்தியப் பிரதமர் பணிப்புரை

வன்னியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார். வடக்கில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற மன்னார், கிளிநொச்சி, முல்லைத்...

முன்னாள் விடுதலைப்புலி சந்தேக நபர் அக்கரைப்பற்றில் கைது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் விடுதலைப்புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் இளம் யுவதியொருவர் விஷேட புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் திருக்கோவில் காயத்திரி கிராமத்தை சேர்ந்த தங்கவடிவேல் யுகிர்தா என்ற இளம் பெண்னே...

காதலைரை தேடிச்சென்ற இலங்கைப்பெண் இந்தியசிறையில் அடைக்கப்பட்டு விடுதலை

நிசாராணி என்ற இலங்கை பெண் ஒருவர் போலிகடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய ஆந்திர பிரதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனினும் அவர் இலங்கைக்கு...

பிள்ளையானின் பாதுகாப்பு வகனம் மோதியதில் மூவர் பலி

கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் பாதுகாப்பு வகனமொன்று மோதியதில் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கிழக்குமாகாண முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சென்ற வாகனத் தொடரணிகளின் வாகனமொன்றே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குருணாகல் பகுதியில் இன்று அதிகாலை...

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக ஆஸிசென்ற 260அகதிகள் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் படகுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கை தமிழர்களும் தாம் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அனுமதிக்கப்படா விட்டால் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர். இவர்கள் தற்போது பான்டெனில் உள்ள மெரக் துறைமுகத்தில் இந்தோனேசிய...

கோவை மாநாட்டில் சிவத்தம்பியும் பங்கேற்கிறார் -கருணாநிதி

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியும் பங்கேற்கிறார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010,...

முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்பு

முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும், கிளைமோர் குண்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்து. இவற்றில் ஆர்.சி.எல், அதற்கான குண்டுகள், மிதிவெடிகள், கைக்குண்டுகளும் அடங்குவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு...

யாழ். கைதடியில் கணவரால் மனைவி குத்திக் கொலை

யாழ்ப்பாணம் கைதடிப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 7.30அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரே தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

வெளிநாடு ஒன்றில் முன்னாள் இராணுவத்தளபதியும் எதிர்கட்சித்தலைவரும் சந்திக்கத் திட்டமா??

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த 23ம் திகதி இரவு வெளிநாடு சென்றவுடன் எதர்கட்சித்தலைவர் நேற்று முன்தினம்  வெளிநாடு சென்றுள்ளார் இந்நிலையில் இந்த விஜயங்கள் குறித்து அரசபுலனாய்வுப் பிரிவினர் விஷேட கவனம் செலுத்தியிருப்பதாக...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் 12பேர் மாவோய்ஸ்டுகளுக்கு பயிற்சியளிக்க இந்தியா சென்றுள்ளனர் -இந்திய ஊடகம்

நக்சலைட்டுகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் பெறுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதி காடுகளில் பயிற்சி எடுத்ததற்கு கூட்டங்கள் கூடியதற்குமான சான்றுகளையும் மத்திய...

மலேசியாவில் பாலம் இடிந்தது- 22 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி

மலேசியாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் மீது சென்று கொண்டிருந்த 22 பள்ளிச் சிறார்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த விபத்தில் பல தமிழ்க்...

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரனும் மனைவியும் விடுதலை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் இன்றுபிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரபல ஊடகவிலாளரும் 20 வருட கடூழிய சிறைக்குட்பட்டவருமான திஸ்ஸநாயகம் வெளியிட்ட நோர்த் ஈஸ்ட்டர்ன்...

ஐ.நாவின் அமைதிகாக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும் -இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக அதிகளவு படைவீரர்களை அனுப்ப முடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள காரணத்தினால் அதிகளவிலான படைவீரர்கள் வெளிநாட்டு இராணுவப் பணிகளில் ஈடுபடுத்த முடியும்...

துணுக்காய் பகுதிக்கு மேலும் ஆயிரம் பேரை அனுப்பி வைக்க ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக மேலும் ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா தெரிவித்துள்ளார். கடந்த 22ம் திகதி 297 குடும்பங்களைச் சேர்ந்த 1027 பேர் துணுக்காய்...

ராஜதானி ரயிலை நிறுத்தி டிரைவரை கடத்திய நக்ஸல்கள்

புவனேஸ்வர்-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திய நக்ஸலைட்டுகள், அதன் டிரைவரை கடத்திச் சென்றுவிட்டனர். மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. ஜர்கிராம்- சார்டியா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே...

வவுனியா முகாமிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்டபோது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக...

இலங்கைமீது தடைகள் விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்யவேண்டும் -பசுமைக் கட்சி

இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம்குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கைமீது தடைகள் விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்யவேண்டும் என்று அவுஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் இலங்கையைவிட்டு வெளியேறி...

யாழில் அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தின் அனைத்து கடைகளிலும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையிலேயே வழங்கப்படுகின்றன. குறிப்பாக சகல பால்மா பக்கற்றுக்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் 10ரூபா குறைந்தே விற்கப்படுவதனை காணக்கூடியதாகவுள்ளது. அரிசி, சீனி, மா உள்ளிட்ட...

தனது நிர்வாண படத்தை வெளியிட்ட ஆசிரியை

தனது நிர்வாண புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட ஆசிரியை சிக்கலில் மாட்டியுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்தவர் 26வயதாகும் ரேச்செல் ஒயிட்வால். இவர் ஆஸ்திரேலியாவின் பென்ட்ஹவுஸ் என்ற இதழின் இணையதளத்தில் இடம் பெற்ற நியூ ஆஸி பேப்ஸ் என்ற...

வெள்ளவத்தையின் பாமன்கடை பகுதி வீடொன்றுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு

கொழும்பு, வெள்ளவத்தையின் பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 875கிறாம் எடைகொண்ட சி-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கொழும்பு...