செல்போன் பதுக்கிய குற்றத்திற்காக ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினி `பி’ வகுப்புக்கு மாற்றம்

ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினி சிறையில் இருந்தபடி தனது செல்போன் மூலம் இங்கிலாந்துக்கு 8 முறையும், இலங்கைக்கு ஒரு முறையும், சென்னைக்கு 5 முறையும் மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு 22 முறையும்...

யுத்தம் முடிந்தும் நாட்டில் சமாதானம் நிலவுவதாக கருதமுடியாது -நாடாளுமன்றில் சம்பந்தன்

நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை நாம் வரவேற்கிறோம் எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக்கருதமுடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 7வது பாராளுமன்றத்தின்...

பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் -நீதிமன்றம் அறிவித்துள்ளது

பம்பலப்பிட்டிய பகுதியில் சித்தசுயாதீனமற்ற பாலவர்ணம் சிவகுமார் என்ற இளைஞர் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சந்தேக நபர்கள் குறித்த நபரை கடலில் மூழ்கடிக்கச் செய்துள்ளதாக நீதவான் சுட்டிக் காட்டியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை...

யாழில் பாலியல் வல்லுறவு கைதான சந்தேகநபர் கைவிலங்கை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளார்

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக கைதான பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்...

எதிர்வரும் மாதங்களில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

எதிர்வரும் மாதங்களில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம், நேற்று கூடியபின்னர், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு சுற்றிவளைப்பு

இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகை இன்றுஅதிகாலை மலேசியா கடலில் வைத்துப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தியும் அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. தாம் மலேசியாவில்...

ரணில் விக்கிரமசிங்க மங்கள சமரவீர சந்திப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்போது தேசியப்பட்டியல் உறுப்பினர், தெரிவுஇடம்பெற்ற வேளையில், தமது தரப்புக்கு ஒரு உறுப்புரிமை...

விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் -அமெரிக்கா வலியுறுத்து

விரைவில் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து இன ஐக்கியத்தை வலுப்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அமெரிக்கா ...

உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் -எதிர்கட்சி தலைவர்

அரசாங்கம் எதிர்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒவ்வொரு  உறுப்பினரினதும் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் இல்லையேல் உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

விடுதலைப்புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் கைது

விடுதலைப்பலிகளின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்களுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் படுகொலை சம்பவங்களுக்கு தண்டணை வழங்காத நாடுகளின் வரிசையில் ஈராக் முன்னிலை வகிக்கிறது என நியூயோர்க்கை மையமாக கொண்டியங்கும் ஊடகவியலாளர்களைப்...

எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரதும் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்-ரணில்

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...

75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு

உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சுமார் 75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக கொண்டுவர முயற்சிக்கப்பட்ட வேளையில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப் பயணிகளின்...

இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு

இலங்கையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியுசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார் நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73வயதான மருத்துவரே இவ்வாறு நியுஸிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார் அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில்  நியுஸிலாந்து...

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகத் தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்;. ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலுக்கு முன்பு வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப்பட்டியல் ஆசனமொன்றை...

ரிஎம்விபியின் மட்டு உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாக மோசடிகள்..

சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி நடத்திவரும் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மற்றும் நிர்வாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள், அரச வாகன...