Breaking News

திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்

அரசின் சலுகையைப் பெறுவதற்காகவும், மீண்டும் இலங்கை செல்லும்போது சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும், 51 இலங்கை அகதி ஜோடிகள் தங்களது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள...

கட்டுகஸ்தோட்டை ரயில் பாலத்தில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த குண்டு

கண்டி கட்டுகஸ்தோட்டை நவயாலத்தென்ன ரயில் பாலத்தின் அடிப் பகுதியில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த சி. 4 ரக வெடிகுண்டு ஒன்றினை கடந்த சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்....

புலிகளின் தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவிப்பு! -இலங்கையின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பாகும் புலிகளின் "தரிசனம்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளையடுத்தே இந்த ஒளிபரப்பை தடை செய்வதாக இஸ்ரேல் அரசாங்கம் "தரிசனம்' நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது. தரிசனம்...

ஈராக்கில் பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலில் 16 பேர் பலி

ஈராக் நாட்டில் பக்பா நகரில் டியாலா மாநில கவர்னரின் மாளிகைக்கு வெளியே ஒரு பெண் தீவிரவாதி, தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 16 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்....

புயல் தாக்கியதில் 229 பேர் பலி; 740 பேருடன் கப்பல் மூழ்கியது பயணிகள் கதி என்ன?

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 229 பேர் பலியானார்கள். கடலில் 740 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியது. இதில் 4 பேர் பலியானார்கள். மற்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டை...

மக்கள் வருமானத்தின் நான்குவீதம் ஜனாதிபதியின் செலவீனம்

சர்வதேசமெங்கும் விலைவாசிகள் அதிகரித்துச் செல்கின்ற இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா அரசும் மக்களும் முகம் கொடுத்துள்ள இந்த இக்கட்டான வேளையில் செய்யப்பட வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் பட்டியை இறுக்கிக்கொள்வதாகும். அதாவது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாகும்...

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த...

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன்: சர்வதேச அணுசக்தி கழக தலைவர் தகவல்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சர்வதேச அணுசக்தி கழக தலைவர் முகமது எல்பராடி கூறினார். ஈரான் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் நாளில் 9 ஆயிரம் திருமணம்: இப்போதே முன்பதிவு நடக்கிறது

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ஒலிம்பிக்போட்டிகள் தொடங்குகின்றன. மேலும் சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். எனவே இந்த நாளை, தங்களின் வாழ்நாளின் முக்கியமான தினமாக கருதும் சீன இளைஞர்கள்...

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம்

இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன்...

மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: மதுபானபார் நெரிசலில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் பலி; ஆண்டுவிழாவை கொண்டாடியபோது பரிதாபம்

மெக்சிகோ நாட்டின் இரவு நடன விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். மெக்சிகோ நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கும், குறிப்பிட்ட...

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான “ஆயுர்வேதம்” லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பு

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான "ஆயுர்வேதம்' லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரபல இந்திய ஆயுர்வேத நிறுவனமான சாந்திகிராம் தனது புதிய கிளையை லண்டன் செüத்ஹால் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்தக்...

சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!

சிந்திப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சிந்திக்கும்போது, மூளையில் உள்ள நூற்றுக்கணக்கான மரபீனிகள் செயல்படத் துவங்குகின்றன. இந்த செயல்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கும்...

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்

இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக பொலிசார் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக கடத்தப்பட்ட தேவதாசன்...

வியட்நாமில் ‘மிஸ் யுனிவர்ஸ்’

வியட்நாம் நாட்டில் நா ட்ராங் நகரில் அடுத்த மாதம் ‘மிஸ் யுனிவர்ஸ்’ (பிரபஞ்ச அழகி) போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக உலக நாடுகளிலிருந்து 81 அழகிகள் வந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் ‘மிஸ்...

நேபாள அரசில் யாருக்கு எந்தப் பதவி?: தலைவர்கள் ஆலோசனை

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசில் யாருக்கு எந்தப் பதவியை வழங்குவது என்பது தொடர்பாக அரசியல் தலைவர்கள் சனிக்கிழமை கூடி ஆலோசித்தனர். காத்மாண்டில் வெள்ளிக்கிழமை நடந்த ஏழுகட்சிக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் எந்த...

ஆப்கன் குண்டு வெடிப்பில் 4 யு.எஸ். வீரர்கள் பலி

ஆப்கனில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அமெரிக்கப் படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தகவல் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தஹார் நகரில் பாதுகாப்புப் பணியில் இருந்த அமெரிக்க வீரர்களை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள்...

வட இலங்கை மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும்...

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதை தொடர்ந்து கப்பல் கவிழ்ந்து 4 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதை தொடர்ந்து கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடற்கரையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 700 பயணிகளுடன் சென்ற...

கொழும்பில் கைது செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தேவதாசன்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரியான புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தேவதாசன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்பட இயக்குனர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தேவதாசன்...

“த லவ் குரு” ஹொலிவுட் திரைப்படத்திற்கு அமெரிக்கா வாழ் இந்துக்கள் எதிர்ப்பு

ஹொலிவுட் நகைச்சுவைத் திரைப்படமான "த லவ் குரு' ஆனது உலகளாவிய ரீதியிலுள்ள மில்லியன் கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கையைக் காயப்படுத்துவதாக உள்ளதென கண்டனம் தெரிவித்து, அமெரிக்கா வாழ் இந்துக்கள் எதிர்ப்பு நடவடிக்கை யொன்றை ஆரம்பித்துள்ளனர்....

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில் பாரக் ஒபாமா முன்னிலை

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக்கணிப்பில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை விட அதிக வாக்குகள் பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பதவி தேர்தல்...

சிம்புவின் ‘டண்டனக்கா’!

சிம்புவின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. வல்லவன் படத்துக்காக நயன்தாராவின் உதட்டைத் தன் பற்களால் கவ்வி இழுத்து அதைப் போஸ்டராக்கி பரபரப்பு பண்ணியவர், இப்போது தன் குறும்பை டைட்டிலிலேயே காட்டத் தொடங்கிவிட்டார். சிலம்பாட்டம்...

ஆர்ட்டிக் பிராந்திய கடல் பனி மிக வேகமாக உருகி வருகிறது விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆர்ட்டிக் பிராந்திய கடல் பனியானது கடந்த வருடத்தையும் விட இவ்வருடம் மிக வேகமாக உருகி வருவதாக, "அமெரிக்க தேசிய பனி மற்றும் பனிப்பாறை தரவு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி பனி உருகும் வீதம்...

பிறந்து ஒரேநாளான குழந்தையை விற்க முற்பட்ட தாய் கைது

பிறந்து ஒரேநாளான குழந்தையை எட்டாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அக்குழந்தையின் தாய் உட்பட மூன்று பெண்களை கல்முனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் மகப்பேறுக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்னொருவர் குழந்தையொன்றை பெற்ற...

விம்பிள்டன் டென்னிஸ் 2008 : புதிய போட்டியில் ஷரபோவாவும், இவனோவிச்சும்..

டென்னிஸ் உலகில் புதிய முதல்நிலை வீராங்கனையாக சேர்பியாவின் அனா இவனோவிச் உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற பிரான்ஸ் பகிரங்கக் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்ற இவனோவிக், விம்பிள்டன் போட்டிகளில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிற்கு பலத்த சவாலாக...

செவ்வாயில் தரைக்கு அடியில் பனிக்கட்டி இருப்பதை ஃபீனிக்ஸ் விண்கலம் உறுதி

சிவப்பு கிரகமான செவ்வாயில் தரைக்கு அடியில் பனிக்கட்டி இருப்பதை ஃபீனிக்ஸ் விண்கலம் உறுதி செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஃபீனிக்ஸ் உறுதி செய்துள்ளது விஞ்ஞானி களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. செவ்வாய்...

ஒபாமா, ஹிலாரி கூட்டு பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமாவும், அவரை எதிர்த்து வேட்பாளராக களமிறங்கிய ஹிலாரி கிளிண்டனும் கூட்டாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். வரும் 27ந் தேதி நடைபெற உள்ள பிரச்சாரத்தில் இருதலைவர்களும் ஒரே...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

அமெரிக்க ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணை பாகங்கள் திருட்டுப் போய் விட்டன

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் இருந்து அணு ஆயுத ஏவுகணைகளின் பாகங்கள் ஆயிரக்கணக்கில் திருட்டு போய்விட்டன. அவற்றை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இதற்கு...

மெக்சிகோ: நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

மெக்சிகோவில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றில் சிறுவர்களுக்கு போதை மருந்து மற்றும் மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த...

மேற்கு நாடுகளில் புலிகளை கைது செய்யும் பொலிஸ் நடவடிக்கைகள் தீவிரம்

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல்வேறு முன்னணி மேற்கு நாடுகளிலும் சிறிலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து...

2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும்

2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தற்போது உலகில் 6.7 பில்லியன் மக்கள் உள்ளனர் என்றும், இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 304 மில்லியன்...

பகரைனில் இந்திய போலீஸ்காரர் கைது

அரபுநாடுகளில் ஒன்றான பகரைனில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு உள்ள இந்தியப்பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியை கறபழிக்கப்பட்டதாக அவர் பொய்ப்பிரசாரம் செய்தார் என்று கூறப்படுகிறது. அவர் அந்த...

10 ஆண்டுகளாக முடிவெட்டாத ஆஸ்திரேலியர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பில் மூர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக முடிவெட்டிக் கொள்ளவில்லை., ஷேவ் செய்து கொள்ளவும் இல்லை. இதனால் அவரது தலைமுடி நீளமாக நம் ஊர் பெண்களின் கூந்தல் போல உள்ளது. சாமியார்கள்...

லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை

லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக...

இத்தாலியில் கைதான புலிச் சந்தேகநபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களே!!

இத்தாலியில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இத்தாலியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என கைதானவர்கள் புலிகள்...

செக்ஸ் டார்ச்சர் நடிகை மாளவிகா ஓட்டம்

Ôகார்த்தீகைÕ பட தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார் மாளவிகா. சினிமாவில் பிசியாக இருந்தபோதே தொழிலதிபர் சுமேஷை காதலித்து மணந்தார் மாளவிகா. திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர்...

திண்டிவனம் பாமக நகராட்சித் தலைவர் திமுகவுக்கு தாவல்!

திமுக, பாமக இடையிலான உறவு முறிவுக்குப் பின்னர், டாக்டர் ராமதாஸின் பேட்டையிலிருந்து முதல் பெரிய தாவல் நடந்துள்ளது. திண்டிவனம் நகராட்சித் தலைவராக இருக்கும் பாமகவின் பூபாலன், திமுகவில் இணைந்துள்ளார். திமுக, பாமக உறவு முறிவைத்...