ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தீ பற்றி எரிந்த கார்…!!
Read Time:1 Minute, 14 Second
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்ததாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லையென கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியிலிருந்து மொரட்டுவை பகுதியை நோக்கி சென்ற இந்த கார் கினிகத்தேனை ரஞ்ஜுராவ பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக பல மணி நேரம் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.
குறித்த கார் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட ஒன்று என்றும் தெரியவருகிறது.
Average Rating