அதிசிறந்த விளையாட்டுத்துறை ஆற்றலுக்கான விருது செரீனாவுக்கு…!!
அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டஸ் சஞ்சிகையினால் வருடாந்தம் தெரிவு செய்யப்படும் அதி சிறந்த விளையாட்டுத்துறை ஆற்றல் வெளிப்பாட்டாளர் வரிசையில் இவ்வருடம் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவாகியுள்ளார்.
விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் இந்தக் கௌரவத்தைப் பெறும் இரண்டாவது வீராங்கனை செரீனா ஆவார். இதற்கு முன்னர் கிறிஸ் எவர்ட் 1976 இல் இந்தக் கௌரவத்தைப் பெற்றிருந்தார்.
டென்னிஸ் விளையாட்டுத்துறையிலிருந்து இந்த விருதை வென்றெடுக்கும் நான்காவது நபர் செரினா ஆவார்.
இதற்கு முன்னர் பில்லி ஜீன் கிங் (1972), க்றிஸ் எவர்ட் (1976), ஆர்த்தர் அஷே (1994 இவர் நிர்வாகத்துறைக்காக இந்த விருதை வென்றிருந்தார்) ஆகியோர் டென் னிஸ் விளையாட்டுத்துறையிலிருந்து இந்த விருதை வென்றிருந்தனர்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் அரங்கில் முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்வ தாலும் மாபெரும் (கிராண்ட் ஸ்லாம்) டென் னிஸ் போட்டிகளில் 21 சம்பியன் பட்டங்களை வென்றுள்ளதாலும் இந்த விருதை செரீனாவுக்கு வழங்குவதாக ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் க்றிஸ் ஸ்டோன் தெரிவித்தார்.
Average Rating