ஒரே ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்கள் ; சீன நிறுவனம் சாதனை…!!
ஒரே ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற முதல் சீன நிறுவனம் என்ற பெருமையை ‘ஹூவேய்’ நிறுவனம் பெற்றுள்ளது.
உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் 3 ஆவது இடத்தில் சீனாவின் ‘ஹூவேய்’ நிறுவனம் உள்ளது. சம்சுங் 23.8% உடன் முதலிடத்திலும், அப்பிள் 13.5 % உடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
குறிப்பாக, சீனாவில் கடந்த சில மாதங்களில் ‘ஹூவேய்’ வேகமாக பிரபலமாகியுள்ளது. முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியாக சீன நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
முன்னணி ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் மிகக்குறைந்த விலையில் இந்த சீன கைத்தொலைபேசிகள் தருவதாலேயே பலர் சீன ஸ்மார்ட்போன்களை விரும்புவதாக ‘ஹூவேய்’ நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் 10.8 கோடி ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கும் முதல் சீன நிறுவனம் ‘ஹூவேய்’ என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating