புரூஸ்லீ படக்குழுவினருடன் தெறி விழாவை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்..!!
விஜய் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘தெறி’ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த சந்தோஷத்தை புரூஸ்லீ படக்குழுவினருடன் ஜி.வி.பிரகாஷ் கொண்டாடியுள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இது ஜி.வி.பிரகாஷின் 50வது படமாகும். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
தற்போது படம் ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் தேவா பாடிய ‘ஜித்து ஜில்லாடி…’ பாடல் வரும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆட்டம் போடுகின்றனர்.
தன்னுடைய இசைக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் ‘புரூஸ்லீ’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்
Average Rating