நயன்தாரா படத்திற்கு கமல் பட தலைப்பு..!!
Read Time:1 Minute, 19 Second
நயன்தாரா நடித்து வரும் புதிய படத்திற்கு கமல் படத்தின் தலைப்பை வைக்க இருக்கிறார்கள்.
நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘மாயா’, ‘நானும் ரௌடிதான்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது இவர் கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ படத்திலும், விக்ரமுடன் ‘இருமுகன்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படங்களை தவிர இயக்குனர் பொன்ராம் தயாரிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘டிக் டிக் டிக்’ படத்தின் தலைப்பையே இப்படத்திற்கும் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘டிக் டிக் டிக்’ படத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 1981ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.
Average Rating