நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி: இத்தாலியில் கொடி கம்பங்கள் பாதியில் பறந்தன…!!

Read Time:2 Minute, 8 Second

201608280317457967_Flags-At-Half-Mast-As-Italy-Mourns-Earthquake-Deaths_SECVPFஇத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் நோர்சியா என்ற நகரை மையமாகக்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை 3.36 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிர்வுகளாலும் சிறிய நகரங்களும், கிராமங்களும் சின்னாபின்னமாகின.

இத்தாலியில் நில நடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300-ஐ எட்டியது. இது அந்நாட்டில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இத்தாலி நாட்டில் கொடி கம்பங்கள் பாதியில் பறக்க விடப்பட்டன.

அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, பிரதமர் மட்டியோ ரென்ஜி மற்றும் அந்நாட்டு தலைவர்கள் பலர் அஸ்கோலி பிசெனோவில் உள்ள விளையாட்டு ஹாலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, நிலநடுக்கத்தின் போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களுக்கு அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா பாராட்டு தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் மாணவர்களுடைய பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்;சி.வி.விக்னேஸ்வரன்…!!
Next post மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது: தென்பிராந்திய ராணுவ தளபதி பேட்டி..!!