மாதவிடாய் காலத்தில் உடல் எடை அதிகரிக்குமா?
பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்க்கும், அவர்களின் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பெண்களுக்கு மாதவிடாயின் போது, உடல் பருமன் திடீரென அதிகரிக்கும். ஏனெனில், மாதவிடாயின் போது, ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக சுரப்பதால், குறைவான வளர்சிதை மாற்றம் ஏற்படுகிறது.
இதனால் பெண்களின் உடல் இயக்கங்கள் மாதவிடாயின் போது மிகவும் குறைவாக செயல்படும்.
பெண்கள் இந்த நேரங்களில் கலோரி அதிகமான உணவுகளை உண்பது மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளாமல் இருந்தால், உடல் பருமன் அதிகரித்து விடுகிறது.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், என்பதை தெரிந்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் உடல் பருமனை தவிர்த்து விடலாம்.
மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடியவை
ஒமேகா- 3, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்த பழம், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் உள்ள கீரை, பால், நட்ஸ், தேங்காய் பால் போன்ற உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.
சோயாவில் இயற்கையாக ஈஸ்ட்ரோஜன் உள்ளது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் சோயாவை உணவில் சேர்த்துக் கொண்டால், இதில் உள்ள புரோட்டின், நார்சத்து ஆகிய சத்துக்கள் நம் உடலில் சுரக்காத ஈஸ்ட்ரோஜன் குறையை நிவர்த்தி செய்கிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்டு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாதவை
மாதவிடாய் காலத்தின் போது, வளர்ச்சிதை குறைவாக இருப்பதால், பெண்கள் இனிப்பு வகையைச் சேர்ந்த கேக், பிஸ்கெட் போன்ற உணவுகளை தொடவே கூடாது. ஏனெனில் இது உடல் பருமன் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
கொழுப்புச் சத்துக்கள் அதிகமான உணவுப் பொருட்களை, மாதவிடாய் காலத்தின் போது, பெண்கள் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இதனால் உடல் பருமன் அதிகரிப்பு தடுக்கப்படுகிறது.
மாதவிடாயின் போது, அதிக அளவு கால்சியம் நிறைந்த மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிடவே கூடாது. இதனால் சிறிநீரக கற்கள், மலச்சிக்கல் மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்கப் படுகிறது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating