மலேசியாவுக்கு விரைந்த சிங்கம்-3 படக்குழு…!!
சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்-3’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகிவரும் இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டது. கடைசியாக ஆந்திராவில் தலக்கோணம் காட்டுப் பகுதியில் இப்படத்திற்கான முக்கியமான ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினர்.
தற்போது, ‘எஸ்-3’ படக்குழு மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு, பாடல் மற்றும் சில முக்கியமான காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மலேசியாவில் படப்பிடிப்பை முடித்த கையோடு படக்குழுவினர் அடுத்ததாக இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இப்படம் அடுத்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
Average Rating