தாடி வைத்த பெண்ணை காதலிக்கும் விசித்திர மனிதர்..!! (படங்கள்)
தாடி வைத்த பெண் ஒருவருக்கும் விசித்திரமான கைகளைக் கொண்ட ஆண் ஒருவருக்கும் இடையிலான தகவல் காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது.
தாடி வைத்த பெண் ஒருவருக்கும் விசித்திரமான கைகளைக் கொண்ட ஆண் ஒருவருக்கும் இடையிலான தகவல் காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது. 30 வயதான ஜெஸா ஒல்ம்ஸ்ட் எனும் பெண்ணுக்கு மரபணு கோளாறு காரணமாக தாடி உள்ளது. தாடி வைத்த பெண் என இவர் வர்ணிக்கப்படுகிறார்.
39 வயதான கிரேடி ஸ்டில்ஸ் என்பவரின் இரு கைகளும் விசித்திரமான வகையில் இரண்டாகப் பிளவடைந்துள்ளன. சிங்கி இறால் மனிதன் என இவர் வர்ணிக்கப்படுகிறார்.
இவ்விருவரும் வெனிஸ் கடற்கரையில் சந்தித்துக்கொண்டபோது நண்பர்களாகி பின்னர் காதலர்களாக மாறினர்.
தற்போது இவர்கள் இணை பிரியாத காதலர்களாக வலம் வருகின்றனர். இக்காதல் குறித்து தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜெஸாவும் கிரேடியும் கூறுகின்றனர்.
Average Rating