தர்மதுரை பாடலுக்கு ப்ரோமோ தயார் செய்பவர்களை மகிழ்விக்கும் தயாரிப்பாளர்…!!
விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே.சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார். இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ், ‘சலீம்’ முதல் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
அண்மையில் வெளிவந்து 50 நாட்களைக் கடந்து வெற்றிப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது ‘தர்மதுரை’. இந்தப்படம் குடும்பத்துடன் மக்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்திருக்கிறது. ‘தர்மதுரை’ படத்தின்0 பாடல்களை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், விளக்கவே வியப்பூட்டும்.
‘மக்க கலங்குதப்பா’ பாடலுக்கு தாங்களே நடனமாடியும் குடும்பத்துடன் நடனமாடியும், குழுவாக நடனமாடியும் பலவாறாக யுடியூபில் பதிவேற்றி அவற்றை லட்சணக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க வைத்துள்ளார்கள். இன்றும் பார்த்து வருகிறார்கள். இப்படி ஏராளமான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு ரசிக்கப்பட்டு வருகின்றன.
இப்படி ‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய பல ப்ரோமோ பாடல்கள் கலக்கி வருகின்றன. சாதாரண சினிமாப்பாட்டு என்பது இன்று புதிய பரிமாணத்தை அடைந்து மகிழ்விக்கிறது என்பது காலமாற்றம் சாத்தியப்படுத்தியுள்ள காட்சியாகும். இப்படி வீடியோக்களை பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ், அவர்களைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் விரும்புகிறார்.
பதிவேற்றிய ஆர்வலர்களை தேர்வு செய்து, ‘தர்மதுரை’ படத்தின் 75வது நாள் விழா மேடையில் திரைப்பிரபலங்கள் மத்தியில் அங்கீகரிக்கவும் பாராட்டவும், நடனத் திறமையுள்ளவர்களுக்கு விழா மேடையிலேயே ஆட வாய்ப்பளிக்கவும் எண்ணியுள்ளார். இதற்காக திறமையான ஆட்டக்காரர்கள் அந்தப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை பதிவேற்றக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Average Rating