சேருவில கப்பல் சேவை ஆரம்பம்

Read Time:1 Minute, 41 Second

Mutur-Slk.jpgதிருகோணமலைக்கும் மூது}ருக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த சேருவில 2 பயணிகள் கப்பல் தனது சேவையினை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. மூது}ரில் இம்மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடாந்து இச்சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. தினமும் இருசேவைகள் திருகோணமலையில் இருந்தும், மூது}ரிலிருந்தும் வழமைபோன்று நடத்தப்படவுள்ளன.

பயணிகள் மாத்திரம் இக்கப்பலில் அழைத்துச்செல்லப்படவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையினர் தெரிவித்தனர்.

மூது}ரிலிருந்து இடம்பெயர்ந்து திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய இடங்களிலுள்ள அகதிமுகாம்களில் தங்கியிருப்போர் மீண்டும் மூது}ர் நகருக்கு திரும்பிச் செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இச்சேவை உடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அகதிகள் திரும்பிச் செல்வதற்கு வசதியாக கந்தளாயில் இருந்து பஸ் சேவைகள் நடத்தப்பட்டு வந்தபோதிலும், பாதுகாப்பு காரணமாக அகதிகள் திரும்பிச் செல்வதற்கு தயக்கம் காட்டி வருகினிறனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 5800பேர் யாழ்ப்பாணத்திலிருந்து கப்பலில் கொழும்பு செல்ல பதிவு
Next post எகிப்து நாட்டில் ரெயில்கள் மோதலில் 80 பேர் சாவு