பாலியல் தொழிலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி: பணி நீக்கம் செய்த காவல் துறை..!!
பிரித்தானிய நாட்டில் காதலியுடன் இணைந்து பாலியல் தொழில் செய்து வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள Sussex நகரில் Daniel Moss(39) என்பவர் பொலிஸ் அதிகாரியாக பணி புரிந்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மன அழுத்தம் காரணமாக விடுமுறை கேட்டு இரண்டு மாதங்களாக வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரியும் அவரது காதலியான Tracey Perryman என்பவரும் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து காவல் துறை விசாரணையை தொடங்கியது.
அப்போது, பாலியல் தொழிலாளிகள் உள்ள ஒரு இணையத்தளத்தில் ‘எனது காதலி மற்றும் என்னுடன் சேர்ந்து உடலுறவுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புக்கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் 210 பவுண்ட் கட்டணமாக கொடுக்க வேண்டும்’ என அந்த பொலிஸ் அதிகாரி விளம்பரம் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல் வெளியானதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது நேற்று முறையான விசாரணை தொடங்கியபோது ‘அவரும் அவரது காதலியும் பல மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளது’ ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி உடனடியாக பணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பேசியபோது, பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் அவர் செயல்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
பணியில் இருந்தாலும் விடுப்பில் இருந்தாலும் பொலிஸ் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Average Rating