உடலில் ஏற்படும் வலிகளுக்கான காரணம்..!!

Read Time:3 Minute, 56 Second

201709110832391586_joint-pain-reason_SECVPFமுதுகு, கால் மூட்டு, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும். மூட்டு வலி, கழுத்து வலிக்கு தைலம், முதுகு வலி, தலை வலிக்கு மாத்திரை என நாமாகவே ஒரு யூகத்தில் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால், வலிக்கான காரணம் குறித்து, என்றுமே சிந்தித்ததில்லை. வலி என்பது, உடலில் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கோளாறைக் குறிக்கும் அறிகுறி தான்.

உடலின் அடிப்படை கட்டமைப்பு, அதன் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொண்டால், தோள், முழங்கை, மணிக்கட்டு, மூட்டு, இடுப்பு, கணுக்கால், பாதம், தலை, முதுகு ஆகியவற்றில் ஏற்படும் வலிகளுக்கு, தீர்வு காணலாம். இயங்கா நிலையில் வாழ்வது முழுமையான வாழ்க்கையல்ல. வலியை உணராமல் இருக்க மட்டும் தீர்வு காணும் நாம், நம் உடல் கட்டமைப்பில், மாற்றம் ஏற்பட்டால், அதைக் கண்டு கொள்வதில்லை. அதை சரி செய்தால் மட்டுமே, வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

உதாரணமாக, முதுகு வலி ஏற்பட்டால், மாத்திரை சாப்பிடுவது, இடுப்புப் பட்டை போட்டுக் கொள்வது, பாதிப் படைந்த முதுகுக்கு ஏற்ப, மெத்தை அமைத்துக் கொள்வது, முதுகை சாய்க்க, நாற்காலியை பிரத்தியேகமாக வடிவமைப்பது என, எல்லாவற்றையும் செய்து கொள்கிறோம். ஆனால், இவை எதுவும் தீர்வாக அமையாது. முழு ஈடுபாட்டுடன், முயற்சி செய்து மீள்வது ஒன்றே தீர்வு.

வலி ஏற்பட்டால், உடல் பலம் குறைந்து விட்டதென்றோ, வாழ்வதற்குத் தேவையான திறனை இழந்து விட்டதாகவோ கருத முடியாது. உடல் அசைவு இல்லாததால் ஏற்படும் கோளாறுக்கான அறிகுறி தான், வலி என்பதை உணர வேண்டும்.

உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட்டால், அந்த பகுதியில் தான் பிரச்சினை என்று கருதக் கூடாது. உதாரணமாக, உங்கள் கழுத்திலோ, மூட்டிலோ வலி இருந்தால், குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதுவது தவறு. இடுப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்; எனவே, இடுப்புப் பகுதியில் உள்ள பாதிப்பை சரி செய்தால், கழுத்திலோ, மூட்டிலோ ஏற்பட்டுள்ள, வலியை சரி செய்யலாம்.

மேலும், வலி ஏற்படுவது, கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தானே தவிர, தற்போதைய உடல் நிலையால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முதுகு, மூட்டு, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என, எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே முழுதீர்வு கிடைக்கும் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டுவிட்டரில் வறுபடும், கோஹ்லியின் இங்கிலாந்து காதலி! அப்ப அனுஷ்கா சர்மா..!!
Next post 2 வயது குழந்தையின் அசாத்திய பேச்சு… பாருங்க வாயடைத்துப் போயிடுவீங்க..!! (வீடியோ)