நடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ் ராஜ்..!!

Read Time:2 Minute, 16 Second

நடிகர் பிரகாஷ் ராஜ் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக கடும் கண்டம் தெரிவித்திருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து சாடியிருந்தார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்திப்பில் பிரகாஷ் கூறும்போது: எந்த வித அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அரசியல் களத்திற்குள் நடிகர்கள் இறங்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் தலைவர்களாக திரைப்பட நடிகர்கள் மாறுவது எனது நாட்டிற்கு பேரழிவு என்றே கருதுகிறேன். பிரபலமானவர்கள் என்பதினால் மட்டுமே நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது. அப்படி வரும் பட்சத்தில் அது பேரழிவாக இருக்கும். நாட்டில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் தெளிவான குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்து, மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். மேலும், ரசிகர்கள் என்ற முறையில் வாக்களிக்காமல், குடிமக்கள் என்ற முறையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதிரைகளை வைத்தே அற்புதமான சாதனை படைத்த மனிதன்..!! (வீடியோ)
Next post தீடீரென வந்த வெள்ளம்: தப்பி ஓடிய நாய்..!! (வீடியோ)