இராக்கில் கார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி: 75 பேர் காயம்
Read Time:56 Second
தெற்கு பாக்தாத்தில் புதன்கிழமை நிகழ்ந்த 3 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். 15 கமாண்டர்கள் உள்பட 75 பேர் காயமடைந்தனர். தெற்கு பாக்தாத்தில் மார்க்கெட் வளாகத்திற்கு வெளியே புதன்கிழமை கார் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து அருகேயுள்ள பகுதியில் மேலும் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 2 கட்டடங்கள் சேதமடைந்தன. 12-க்கும் அதிகமான கடைகள் இடிந்து விழுந்தன. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கமாண்டர்கள் இப்பகுதியை கடக்கும் போது குண்டு வெடித்ததால் 15 பேர் காயமடைந்தனர்.