ஜாதிக்காய் நன்மைகள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 11 Second

ஜாதிக்காய் கொட்டை, ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிவப்பு நிறமான பூ (ஜாதிப்பத்திரி). அதன் மேல் ஓடு என அனைத்தும், உணவிலும் மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள், மருந்துகள், வாசனைத் திரவியங்கள், மூகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து, முகத்தில் பூசி வர, முகப்பரு, கரும் புள்ளிகள், தழும்புகள் நீங்கும்.

ஜாதிக்காயை இடித்து நன்றாக பொடி செய்து கொண்டு அரை ஸ்பூன் பொடியை 100 மி.லி. தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்தவிதமான பேதியானாலும் உடனே கட்டுப்படும். தொடர்ந்து 2 அல்லது 3 வேளை சாப்பிட அறவே பேதி நின்றுவிடும்.கருவுற்ற காலத்தில் தாய்மார்களுக்கு உண்டாகும் மசக்கை வாந்திக்கு ஜாதிக்காய் சூரணத்தை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை, மாலை இரண்டு வேளை உணவுக்கு பின் தேனில் குழைத்து சாப்பிட்டால் மசக்கை வாந்தி நிற்கும்.ஜாதிக்காய் பொடியை தினசரி இரவு படுக்குமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் பசும்பாலுடன் சாப்பிட்டுவர நல்ல தூக்கம் வருவதுடன் மறுநாள் காலை புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

ஜாதிக்காயை நல்ல தண்ணீரில் சந்தனம் இழைப்பது போன்று உரைத்து தினசரி இரவு படுக்குமுன் கண் இமைகளின் மீது லேசாக பூசி படுக்க கண் நோய்கள் குணமாகும். கண் பார்வை திறன் அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். ஜாதிக்காயை வெற்றிலை பாக்குடன் சேர்த்து உபயோகிக்க உண்ட உணவு எளிதில் சீரணமாகும். வாய் நாற்றம் நீங்கும். ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி, இதய துடிப்பு, படபடப்பு குணமாகும். பலருக்கு வாயுத் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சீரணம் ஆகாது. பசி இருக்காது. மலச்சிக்கலும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது ஜாதிக்காய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சினிமா முதல் காதுகுத்து வரை… வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்! (மகளிர் பக்கம்)
Next post சந்ததி பெருக்கும் சித்தா! (மருத்துவம்)