வசீகரமாக இருந்ததால் எமிரேட் ஆண்கள் சவூதியிலிருந்து வெளியேற்றம்
Read Time:1 Minute, 13 Second
சவூதி அரேபியாவில் நடைபெற்ற பாரம்பரிய கலாச்சார விழாவில் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர்.
பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தபடி, விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டிருந்த அவர்களை முத்தாவீன் என்னும் சவூதி அரேபியாவின் மதவாத போலீசார் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்ற போலீசார், உடனடியாக அவர்களை விமானம்மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் மூவரும் வசீகரமான முக அமைப்புடனும் திடகாத்திரமான உடல் அமைப்புடனும் இருந்ததால் அவர்களின் வலையில் சவூதி பெண்கள் விழுந்து விடாமல் இருப்பதற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Average Rating