42-ஐ எட்டிய அஜீத்…! பிறந்தநாளில் புதிய பட டீசரும் வெளியீடு!!
மே-1 ம் தேதி உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் ஹேண்டசம் ஹீரோ என்று சொல்லப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாளும் கூட. ஐதராபாத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மெக்கானிக்காக வளர்ந்து, எவ்வித சினிமா பின்புலமும் இன்றி சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அஜீத்.
அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, ஆசை நாயகனாக உருவெடுத்து, காதல் மன்னனாக உலா வந்து, தீனாவில் அதிரடி நாயகனாக மாறி, தலயாக பெயர் பெற்று, வரலாறு படைத்து வில்லத்தனமும்(வில்லன்) செய்து, மங்காத்தாவும் விளையாடி இப்போது தமிழ் சினிமாவின் தலயாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இன்று நடிகர் அஜீத் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர் அஜீத். இருந்தபோதும் அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி கேள்விப்பட்ட அஜீத், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தார்.
தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். வீணாக தனது பிறந்த நாளுக்கு விரயம் செய்யும் பணத்தை பெற்றோருக்காக செலவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அஜீத்தை கோரிக்கையை ஏற்று அவரது ரசிகர்களும் ஆடம்பர கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இதற்கு அஜீத்தும் நன்றி தெரிவித்தார்.
தற்போது நடிகர் அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்புக்கு தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் சென்ற அஜீத், அங்கு தனது பிறந்தநாளை கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் எளிமையாக கொண்டாடினார். அஜீத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய பட டீசர் வெளியீடு : தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் உத்தரவு போட்டதால் ரசிகர்கள் சற்று சோர்ந்து போயினர். இருந்தபோது, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள புதிய படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
தற்போது யூ-டியூப்பில் வெளியாகி இருக்கும் இந்த டீசரை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனாலும் டீசரிலும் படத்தின் டைட்டீல் வெளியிடப்படவில்லை. மாறாக அந்த டீசரில் இந்த புராஜக்ட்டின் பெயர் என்ன என்று கேட்க, அதற்கு அஜீத் டைட்டீல் இன்னும் வைக்கவில்லை என்று பதிலளிக்கிறார்.
இருந்தபோதும் இன்று படத்தின் டைட்டீல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் டைட்டீலில் இவ்வளவு சஸ்பென்ஸ் ஏனோ…? தெரியவில்லை.
இருந்தபோதும் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating