தனுஷின் கொம்பன் சுறா வேட்டையாடும்!!
ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் தற்போது, கமலின் விஸ்வரூபம்-2, மரியான், ஐ, திருமணம் என்கிற நிக்காஹ், வல்லினம், பூலோகம் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.
இதையடுத்து கமல் நடிக்கும் தலைவன் இருக்கிறான், விஜய், அர்ஜூன் நடிக்கும் படங்களையும் தயாரிக்க இருக்கிறார்கள். இதில் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் படம் தற்போது வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முதலாக யுவன்ஷங்கர்ராஜா பாடிய பாடல் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த பாடலை எழுதிய தனுஷ் இன்னும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஒய்திஸ்கொலவெறி பாடலுக்கு இணையாக இப்படத்தில் கொம்பன் சுறா வேட்டையாடும் என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார்.
அதோடு, மற்ற வரிகளையும் சிறப்பாக எழுதியிருக்கிறாராம். அதனால் தனுஷை பெரிய பாடலாசிரியர் அளவுக்கு கொண்டாடி வருகிறது அப்படக்குழு.
Average Rating