இளைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய்: இயக்குனர் விஜய் புகழாரம்!!
இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.எல். விஜய் இளைய தளபதி விஜய், அமலா பாலை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குனர் படத்தை எடிட் செய்வதில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது படத்தின் நாயகனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இளையதலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என கூறியுள்ளார். தலைவா பட ஷூட்டிங்கில் விஜய் நடிப்பில் மெய்மறந்து போன இயக்குனர் சில காட்சிகளில் கட் சொல்லக் கூட மறந்துவிட்டாராம்.
மும்பையில் தலைவா ஷூட்டிங் நடந்தபோது விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனால் பொலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
மும்பையில் கூட விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதைப் பார்த்து பொலிசாரே வியப்பில் ஆழ்ந்து விட்டனராம்.
Average Rating