ஹிஸ்ட்ரி கதையில் வேதிகா!!
Read Time:48 Second
வரலாற்று பின்னணி படமா?. கூப்பிடு வேதிகாவை’ எனும் அளவுக்கு பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் நடிப்பை கொட்டித் தீர்த்தவர் வேதிகா. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலை தோட்டத்தில் அவதிப்படும் பெண்ணாக நடித்திருந்தார்.
அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. இப்படமும் பழைய வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. ‘காவிய தலைவன்’ என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர். ஸ்கிரிப்ட் பணி வேகமாக நடந்து வருகிறது. ஹீரோ சித்தார்த்.
Average Rating