மலையாளப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரேம் ஜி!!

Read Time:1 Minute, 37 Second

2111193278Untitled-1தன் தந்தை கங்கை அமரனைப் போலவே இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் தேறியவர் பிரேம்ஜி.

இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், இசையமைப்பது, படம் இயக்குவது போன்றவற்றை நீண்ட காலத் திட்டங்களாக வைத்திருக்கிறார் மனிதர். வெங்கட் பிரபு படங்களில் காமெடியனாக வந்தாலும், கிட்டத்தட்ட படத்தின் ஹீரோ லெவலுக்கு ரசிகர்களைக் கவர்ந்துவிடுபவர் பிரேம்ஜி.ஆனால் மற்ற இயக்குநர்களிடன் படங்களில் அவ்வளவாக எடுபடவில்லை.

இந்த நிலையில் தமிழைத் தாண்டி மலையாளத்திலும் கால்பதிக்கிறார் பிரேம்ஜி. அனில் ராதாகிருஷ்ண மேனன் என்பவர் இயக்கத்தில் பகத் பாஸில் – ஸ்வாதி ரெட்டி நடிக்கும் நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தில் பிரேம்ஜியும் நடிக்கிறார்.

இது அவரது முதல் மலையாளப் படமாகும். இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், “எங்கள் படத்தில் பிரேம்ஜிக்கு சின்ன வேடம்தான். ஆனால் அவருடன் பணியாற்றியது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எதிர்காலத்தில் அவருடன் மேலும் பணியாற்ற ஆசையாக உள்ளது,” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பங்களாதேஷ் கட்டட விபத்தில் சிக்கிய பெண்!!
Next post புலிகளுக்கு உதவியதை ஒப்புக்கொண்ட சுரேஸ்!!