ஒரே நேரத்தில் 101 ரஷ்யப் பெண்கள் ஆகாயத்தில் கரணமடித்து சாதனை..!!
Read Time:1 Minute, 11 Second
ரஷ்யாவைச் சேர்ந்த 101 பேர் அடங்கிய பெண்கள் ‘ஸ்கைடைவ்’ குழுவொன்று ஒரே நேரத்தில் ஆகாயத்தில் கரணமடித்து (டைவ்) சாதனை படைத்துள்ளனர்.
இக்குழுவானது ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலிருந்து 70 கி.மீ. தொலைவிலுள்ள கொலம்னா எனுமிடத்திலே மேற்படி சாகச சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் விமானத்திலிருந்து குதித்து ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து பெரிய மலர் வடிவில் காட்சியளித்து பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் ரஷ்ய ஸ்கைடைவ் வரலாற்றில் 88 பேர் ஒன்றாக கரணமடித்ததே இதுவரையில் சாதனையாக இருந்ததுஇ அந்த சாதனையை இப்பெண்கள் குழு முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating