போனஸ் ஆசனங்கள் மன்னாருக்கும், முல்லைக்கும்??
Read Time:57 Second
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான இண்டு போனஸ் ஆசனங்களும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் அதிகபடியான வாக்குகளைப் பெற்று இரண்டு போனஸ் ஆசனங்களையும் தனதாக்கியது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அ.அஸ்மினுக்கும் முல்லைத் தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலனுக்கும் குறித்த இரண்டு போனஸ் ஆசனங்கையும் வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating