கனடா முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் பலி, 30 பேர் மாயம்

Read Time:2 Minute, 5 Second

64945கனடாவில் மைனஸ் 5 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரை மிகக்கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று கியூபெக் அருகே உள்ள லைஸ் வெர்ட் நகராட்சி முதியோர் இல்லத்தில், நடுஇரவில் தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த இல்லத்தில் சக்கர நாற்காலி மற்றும் நடக்கும் கருவிகளை துணைகொண்டு வசிந்து வந்த 70 வயதிற்கும் மேற்பட்ட 60 ஊனமுற்றோர்கள் அந்த தீயில் சிக்கிக்கொண்டனர்.

மளமளவென பரவிய அந்த தீயானது அப்பகுதியில் வசித்த மற்ற 1400 பேரை பாதிக்காமல் இருக்க உடனே தீயணைப்பு வண்டிகள் அழைக்கப்பட்டன.

பல்வேறு வண்டிகளில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றினார்.

உடல் கருகிய நிலையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீதமிருந்த 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் சிலர் தங்களது வீட்டிற்கு சென்று இருக்கலாம். ஆனால் மீதமிருந்த மற்றவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து எப்படி நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமரும், அதிபரும் தீயில் இறந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தீயணைக்கப்பட்ட பிறகு காலை விடிந்தவுடன் அப்பகுதி முழுவதும் பனி உறைந்து விட்டது என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) புலியுடன் விளையாடும் நபர்..!
Next post உடன்பிறந்த தங்கையுடன், குடும்பம் நடத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்