காரின் எஞ்சினுக்குள் மலைப்பாம்பு!!
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் மலைகள் சூழ்ந்த நியூ மெக்சிக்கோ நகரம் அமைந்துள்ளது.
இங்குள்ள சாண்ட்டா ஃபே பகுதியில் வசிக்கும் ஒரு பெண், கடந்த வியாழக்கிழமை ’ஸ்ட்ராட்’ ஆக மறுத்த தனது காருடன் நீண்ட நேரம் போராடிப் பார்த்து, கடைசியாக அவ்வழியே சென்ற ஒருவரை உதவிக்கு அழைத்தார்.
அவரும் வெகு நேரம் முயற்சி செய்து பலனின்றி போகவே, உதவிக்கு வந்த நபர் காரின் ‘பானெட்’டை திறந்து பார்க்கையில் எஞ்சின் மீது ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்ததை அதிர்ந்துப் போனார்.
அந்த பெண் மலைப்புடன் பாம்பை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்நபர் போலீசுக்கு போன் செய்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார் காரில் இருந்த பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பேட்டரியில் இருந்து எஞ்சினை ஸ்ட்ராட் செய்யும் ‘செல்ஃப் மோட்டார்’ பகுதிக்கு செல்லும் இணைப்பு ஒயரை பிடிபட்ட பாம்பு கடித்து விட்டிருந்ததால் தான் கார் தகராறு செய்ய, பானெட்டை திறந்து அந்த பாம்பை கண்டுபிடிக்க முடிந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
Average Rating