காதல் – மோதல்: 16 வயது மாணவியை கொன்ற இராணுவ சிப்பாய்!!
Read Time:52 Second
கிரிபாவ – ஒருகல சாலிய அசோகபுர பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காதல் விவகாரம் மோதலுக்குச் சென்றதால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
கொலைச் சந்தேகநபர் 23 வயதுடைய இராணுவ சிப்பாய் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கல்கமுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Average Rating