டி.வி.பேட்டியின்போது கோபப்பட்ட பிரஞ்சு அதிபர்
பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி. இவரை அமெரிக்க நாட்டு சி.பி.எஸ். டி.வி.சார்பில் அதன் நிருபர் பேட்டி கண்டார். அவர் சமீபத்தில் தான் தன் மனைவி சிசிலியாவை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், “சிசிலியாவுடனான உங்கள் திருமணம் எந்த நிலையில் உள்ளது” என்று நிருபர் கேட்டார். இதனால் கோபம் அடைந்த சர்கோசி, பிரஞ்சு மொழியில் ஏதோ திட்டிக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். அவர் என்ன சொன்னார் என்பது யார் காதிலும் விழவில்லை. தன் உடையில் பொருத்தப்பட்டு இருந்த மைக்கை அகற்றினார். அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் தன் பத்திரிகை செயலாளரை அழைத்து, இதுபோன்ற முட்டாள்தனமான பேட்டிகளுக்கு எல்லாம் நேரம் இல்லை. நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன். சிசிலி பற்றி நான் ஏதாவது சொல்லவேண்டும் என்று நினைத்தால் அதை இங்கே சொல்லமாட்டேன்என்று கூறினார். அதோடு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.