ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை

Read Time:3 Minute, 31 Second

Irak1.jpgஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை பெண்ணை கற்பழித்து கொன்றதற்கு பழிக்குப் பழி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 அமெரிக்க வீரர்களின் உடல்களை காட்டும் வீடியோ படத்தை அல் கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஈராக் தீவிரவாத அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஈராக் தீவிரவாத அமைப்பான ¬ஜாஹிதீன் ஷýரா கவுன்சில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இணைய தளத்தில் இப்படம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ராணுவ உடை அணிந்த இரு உடல்கள் அதில் காணப்படுகின்றன. சமீபத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களால் கற்பழித்துக் கொடூரமாக கொல்லப்பட்ட ஈராக் பெண்ணுக்கு இந்த இரு வீரர்களின் மரணத்தை அர்ப்பணிப்பதாக அப்படத்துடன் செய்தி இடம் பெற்றுள்ளது.

இதில் ஒரு வீரரின் உடல் முற்றிலும் சிதைக்கப்பட்டுளளது. இருவரும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருவரது உடலிலும் பல பகுதிகளில் சதைகளையே காண முடியவில்லை. அந்த அளவுக்கு வெறித்தனமாக அவர்களை தீவிரவாதிகள் சிதைத்துள்ளனர். உடல்களை துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடை போல தீவிரவாதிகள் துளைத்து எடுத்துள்ளனர்.

வீடியோ படத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த இருவரும் அமெரிக்க வீரர்கள். யூசுபியா என்ற இடத்திலிருந்து இவர்களை கடத்தினோம். இவர்கள் இடம் பெற்றுள்ள அமெரிக்கப் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட எங்களது சகோதரிக்கு இவர்களின் மரணத்தை சமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

வீடியோ படத்தின் காட்சிகள் தொடங்குவதற்கு முன்பு ஓசாமா பின்லேடனின் பேச்சும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் கொல்லப்பட்ட அபு ¬சப் அல் சர்காவியின் குரலும் பின்னணியில் வருகிறது. இந்தக் கொலைகள் குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

கொல்லப்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் மென்சாச்சா, தாமஸ் டக்கர் ஆகிய இரு அமெரிக்க வீரர்களும் இடம் பெற்றிருந்த படைப் பிரிவைச் சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள், ஈராக்கைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கற்பழித்துக் கொன்றது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை கொலை செய்ததாக கடந்த மார்ச் மாதம் குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தகாத வார்த்தைகளால் என் தாய்-தங்கையை மெட்ராசி திட்டினார்: ஷீடேன் பேட்டி
Next post உடல்நிலை மோசமானதால் வேலூர் ஆஸ்பத்திரியில் முருகன் அனுமதி-