தவறான நம்பரில் ஒலித்த குரல்: இதயத்தில் தொடங்கி கண்களில் முடிந்த காதல் திருமணம்…!!
தவறான நம்பரால் அறிமுகமான வயதில் மூத்த பெண்ணை அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரை சேர்ந்த கேசி பெர்க்(25) என்பவர், கடந்த 2012 ஆம் ஆண்டு, தனது தோழியின் அலைபேசி எண் என நினைத்து தவறான நம்பருக்கு போன் செய்துள்ளார்.
மறுமுனையில் பேசிய, ஹேரி க்லெண்டெனிங் என்பவர் நீங்கள் தவறான நம்பரை தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்று அழகாக பதிலளித்துள்ளார்.
அவரின், அழகான பதிலாலும், குரலிலும் மயங்கிய கேசி, மீண்டும் ஹேரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்த கைப்பேசி உரையாடல் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே சென்றது, இருவரும் தங்களது வாழ்க்கை விடயங்களை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இருவரின் இதயத்தையும் பரிமாறிக்கொண்டனர்.
இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு நாள் கேசியிடம் ஹேரி தனது வயது 53 என கூறியுள்ளார், இருப்பினும் காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்று கூறிய கேசி, முன்பை விட இப்போது தான் நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர், நாளடைவில் திருமணம் செய்துகொண்ட இவர்கள் தற்போது இல்லறமே நல்லறமாய் வாழ்ந்து வருகிறார்கள்.
Average Rating